தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பேர்
  1. 3முட்டை
  2. 10பாதாம் பருப்பு
  3. ஒரு கப் பால் பவுடர்
  4. வெண்ணிலா எசன்ஸ்
  5. கொக்கோ பவுடர்
  6. சீனி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முட்டை வெள்ளை கரு மஞ்சள் கரு தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் உரித்து இடித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெள்ளைக்கரு, பால் பவுடர், வெண்ணிலா எசன்ஸ், சிறிதளவு உப்பு சேர்த்து பீட்டர் பயன்படுத்தி 20 நிமிடங்கள் நன்றாக கட்டி ஆகும் வரை அடித்துக் கொள்ளவும். பிறகு அதை இரண்டு பாதியாக பிரித்து ஒரு பாதியில் கொக்கோ பவுடரை கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பாதியும் தனித்தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு தனியாக எடுத்து வைத்துள்ள மஞ்சள் கருவை வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக பீட்டர் வைத்து அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு பீட் செய்த வெள்ளைக்கரு மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்த வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு ஆகியவற்றை தனித்தனிப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு டப்பாவில் முதலில் வெண்மை நிற கலவையை ஊற்றவும் பிறகு கொக்கோ பவுடர் சேர்த்த கலவையை ஊற்றவும் அதன்மேல் தயார் செய்து வைத்துள்ளா மஞ்சள் கருவை ஊற்றவும், இறுதியாக நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பை மேலே தூவி விடவும் பிறகு அப்படியே மூடி ஃப்ரீசரில் ஸ்டோர் செய்யவும்

  6. 6

    ஆறு மணி நேரத்திற்குப் பிறகு நன்றாக கெட்டியானதும் ஜில்லென்று பரிமாறவும் இப்பொழுது முட்டை ஐஸ்கிரீம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MUHAMMAD SHAHRIL
அன்று

Similar Recipes