எசன்ஸ் தோசை/Essence Dosa
சமையல் குறிப்புகள்
- 1
1கப் இட்லி மாவை எடுத்து வைக்கவும். 2 தக்காளியை பொடியாக நறுக்கி பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
1 ஒரு கைப்பிடி புதினா இலையை கழுவி எடுத்து வைக்கவும். மசாலா அரைப்பதற்கு: 1 கப் தேங்காய் துருவல், 1/4 கப் உடைத்த கடலை, 1 டீஸ்பூன் சோம்பு, 1 துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, 15 மிளகு, 1 துண்டு பட்டை, 2 கிராம்பு எடுத்து வைக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.
- 3
தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன கடலை பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விடவும்.
- 4
அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி, புதினா இலை சேர்த்து வதக்கி விடவும்.,
- 5
அதனுடன் 1 டீஸ்பூன் தனியாத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- 6
தண்ணீர் சிறிது விட்டு அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை நீங்கள் நன்கு கொதிக்கவிடவும்.
- 7
ஒரு கிண்ணத்தில் மாற்றி எடுத்துவைத்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான குருமா ரெடி.😋😋
- 8
தோசைக்கல்லை சூடேற்றி தோசை ஊற்றி விடவும். இருபுறமும் ஆயில் சேர்த்து பொன்னிறமாக சுட்டு வைக்கவும்.
- 9
தோசையின் மேலே சிறிதளவு நெய் ஊற்றி, செய்த குருமாவை தோசையின் மேலே ஊற்றி, தடவி விடவும்.
- 10
சுவையான எசன்ஸ் தோசை ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
-
-
-
-
-
-
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)