தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ வேக வைத்த சாதம்
  2. 2நறுக்கிய வெங்காயம்
  3. 5-6நறுக்கிய தக்காளி
  4. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் தூள்
  6. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  8. 1 டீஸ்பூன் கடுகு
  9. 1 டீஸ்பூன் சோம்பு
  10. தேவையான அளவுஉப்பு
  11. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. தேவையான அளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்... அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்

  2. 2

    தக்காளி சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் தக்காளி சிறிது பிறகு இதில் சாம்பார் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறவும் பிறகு வேக வைத்த அரிசி நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கிளறி குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்

  4. 4

    இப்போது அதிக தீயில் ஒரு நிமிடம் வைத்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கிளறி இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

  5. 5

    சுவையான நொடியில் செய்யக்கூடிய தக்காளி சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes