தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப் அவல்
  2. 1/2 கப் தேங்காய் துருவல்
  3. 1/2 கப் வெல்லம்
  4. 1 ஸ்பூன் எள்ளு
  5. 1/2 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அவலை ஒரு கடாயில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெல்லத்தை போட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

  3. 3

    ஆறவைத்த அவலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும்.

  4. 4

    வெல்லபாகு ஆறியவுடன் வடிகட்டிக் கொள்ளவும்

  5. 5

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடிகட்டிய வெல்லபாகை அதில் ஊற்றி அரைத்து வைத்த அவல் பவுடரை அதில் போடவும்.

  6. 6

    பிறகு கிளறிக்கொண்டே இருக்கவும். எல்லாம் ஒன்று சேர்த்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தி ஆறவிடவும்.

  7. 7

    மாவு ஆறிய உடன் அதில் ஒரு ஸ்பூன் எள்ளு, அரை ஸ்பூன் ஏலக்காய் பவுடர் தேங்காய் துருவல் மூன்றையும் போட்டு ஒன்று சேர்த்து பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து வைக்கவும்.

  8. 8

    பிறகு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டை வைத்து துணி போட்டு பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை அதில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்.

  9. 9

    பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான அவல் கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes