மட்டன் வறுவல்

#vattaram#week11
நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும்.
மட்டன் வறுவல்
#vattaram#week11
நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி,மிளகாய்,3 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டுவிழுது, சிறிதளவு கறிவேப்பிலை,1ஸ்பூன் மிளகாய்த்தூள்,1.5ஸ்பூன் மல்லித் தூள்,1/2ஸ்பூன் மஞ்சள்தூள்,உப்பு மற்றும் மட்டன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீடியம் தீயில் 6 விசில் விடவும்
- 2
மட்டன் நன்கு வெந்ததும், வேகவைத்த தண்ணீரை தனியாக வடிகட்டவும்.(நான் 500மி தண்ணீர்சேர்த்தேன். ஆனால் 250மி தண்ணீர்போதும்).
- 3
வாணலியில் சோம்பு, வரமல்லி,வர மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்து,ஆற வைத்து அரைக்கவும்.
- 4
ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி ஒரு பட்டை,கிராம்பு ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வறுத்து,1முழு பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும், 1டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின், பொடிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும்,1ஸ்பூன் மிளகாய்த்தூள்,1.5 ஸ்பூன் மல்லி தூள்,மல்லிதழை சிறிது சேர்த்து கிளறவும்.
- 6
பின் தேங்காய் பால் சேர்த்து வதக்கி தண்ணீர் வற்றியதும்,மட்டன் வேக வைத்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் வற்றி வற்றி வரும் வரை காத்திருக்கவும்.
- 7
தண்ணீர் நன்றாக வற்றியதும்,வேக வைத்த மட்டன்சேர்க்கவும். 2நிமிடங்கள் நன்றாக கிளறி,பின் வறுத்து அரைத்த மசாலா சேர்க்கவும்.
- 8
உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பத்து நிமிடங்களுக்கு,அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும்.
- 9
மசாலா மட்டன் துண்டுகளோடு சேர்ந்து நன்கு சுண்டி வரும் வரை கிளறவும்.
- 10
கடைசியாக,1ஸ்பூன் நெய் மற்றும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான்.
மிகவும் சுவையான மட்டன் வறுவல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்