ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#vattararam11
இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு

#vattararam11
இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
8பேர்
  1. 1/4கப்பெரியவெங்காயம்,சின்ன வெங்காயம்(நறுக்கினது)
  2. 12வெண்டைக்காய்
  3. 1டேபிள்ஸ்பூன்தனியா
  4. 1/2 டேபிள்ஸ்பூன்க.பருப்பு
  5. 1/2டேபிள்ஸ்பூன்உ.பருப்பு
  6. 1ஸ்பூன்பச்சரிசி
  7. 10சி.மிளகாய்
  8. 1எலுமிச்சையளவுபுளி
  9. 1/4டீஸ்பூன்வெந்தயம்
  10. 4டேபிள்ஸ்பூன்நல்லெண்ணெய்
  11. உப்பு ருசிக்கு
  12. 1ஆர்க்குகறிவேப்பிலை
  13. 1டீஸ்பூன்கடுகு
  14. 1டீஸ்பூன்பெருங்காயம்
  15. 1டீஸ்பூன்ம.தூள்
  16. 2டேபிள்ஸ்பூன்சாம்பார் பொடி

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும்,சின்ன வெங்காயத்தையும் நறுக்கவும்.வெண்டைக்காயை சற்று பெரிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.புளியை ஊற வைத்து வடிகட்டி அதில் ம.தூளை போடவும்.

  2. 2

    வெறும் கடாயில் தனியா,க.பருப்பு,உ.பருப்பு,பச்சரிசி,மிளகாய் வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்.ஆறினதும் மிக்ஸியில் போடவும்.

  3. 3

    பிறகு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும்,கடுகு,வெந்தயம்,மிளகாய் தாளிக்கவும்.பிறகு நறுக்கின வெங்காயம்,உப்பு போட்டு வதக்கவும்.

  4. 4

    சிறிது வதங்கியதும் வெண்டைக்காயை போடவும்.வதங்கினதும் புளிக்கரைசலை. ஊற்றி சாம்பார் பொடி,வறுத்த பொடி, கறிவேப்பிலையை போட்டு புளி வாசனை போக கொதிக்கவிடவும்.கொதித்ததும் பெருங்காயத்தூள் போடவும்..

  5. 5

    கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கிவிடவும்.அருமையான,"ஆனியன்,வெண்டைக்காய்,வத்தக்குழம்பு",தயார்.செய்துபார்த்து அசத்தவும்.இது கெடவே கெடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes