எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 1 கப் துவரம் பருப்பு
  2. 8சர்க்கரை குட்டி மாம்பழம்
  3. ஒரு சிறிய உருண்டைபுளி
  4. 1ஸ்பூன்சாம்பார் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சிறிதளவு ஒரு பச்சை மிளகாய்
  5. 2 ஸ்பூன்வெல்லம்
  6. தேவையான அளவுஉப்பு மஞ்சள்தூள்
  7. ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்வெந்தயம்,ஒரு ஸ்பூன்,கறிவேப்பிலை வரமிளகாய் தாளிப்பதற்கு
  8. 3 ஸ்பூன்ஆயில்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    மாம்பழத்தை கழுவி சிறிதளவு கத்தியால் அடி பாகத்தை கீறி வைக்கவும்.பருப்பு வேக வைக்கவும்.கடுகு உளுந்து,வெந்தயம் கருவேப்பிலை ஒரு பச்சை மிளகாய்,-2 வரமிளகாய் தாளிப்பதற்கு எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சிறிதுஉளுந்து,பச்சை மிளகாய், வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து குட்டி மாம்பழத்தை சேர்த்து இரண்டு நிமிடம்,நன்கு வதக்கவும்.

  3. 3

    வெந்த பருப்பை சேர்த்து சாம்பார் தூள், உப்பு தேவையான நீர் விட்டு சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். மாம்பழம் வெந்துசுருங்கி இருக்கும். தேவையான புளித் தண்ணீர்,வெல்லம் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் கொதித்ததும் இறக்கவும். சுவையான மாம்பழ குழம்பு தயார்.

  4. 4

    மிகவும் சுவையான புளி வெல்லம் சேர்ந்த மாம்பழ குழம்பு தயார். நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes