தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள்.

தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)

#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்தேங்காய் துருவல்
  2. 6(அ)8வர மிளகாய்
  3. 1நெல்லிக்காய் அளவுபுளி
  4. 8(அ)10சின்ன வெங்காயம்
  5. தலா1\4ஸ்பூன்கடுகு, உளுந்து
  6. 1ஸ்பூன்எண்ணெய்
  7. 1கொத்துகறிவேப்பிலை
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் துருவல், மிளகாய், புளி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை முழுதாக உரித்து எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும்

  2. 2

    முதலில் தண்ணீர் ஊற்றாமல் சிறிது கரகரப்பாக அரைக்கவும். அதாவது பல்ஸ் மோடில் சுற்றி அரைக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக சிறிது கெட்டி பதத்திற்கு அரைத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்கவும்

  4. 4

    இதனை சட்னியில் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    சூடான இட்லியுடன், ருசியான தேங்காய் புளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes