இஞ்சி தோசை

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#vattaram#week12
தென்காசி யில் உள்ள 'ஸ்ரீ விநாயகா மெஸ்' தோசை மிகப் பிரபலம். ஏனெனில் 50 வகையான தோசை வகைகள் தயார் செய்கின்றன.
கம்பு, கோதுமை,கேப்பை, சோளம், புதினா, ஊத்தப்பம், பொடி தோசை, முந்திரி தோசை,இஞ்சி தோசை, அடை தோசை....என எராளமான வகைகள்.அதுவும் மிகவு‌ம் சுவையாகவும் இருக்கும்.

இங்கு நான் இஞ்சி தோசை செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. தேவைக்குதோசை மாவு
  2. 1/2கப் இஞ்சி
  3. 15சின்ன வெங்காயம்
  4. 2 மிளகாய்
  5. 2 வரமிளகாய்
  6. 3டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. சிறிதளவுமல்லித்தழை
  8. தேவையானஅளவுஉப்பு
  9. தேவையானஅளவுகடலை எண்ணெய்
  10. 2ஸ்பூன் நாட்டு சர்க்கரை,
  11. சிறிதளவுபுளி
  12. தாளிக்க: கடுகு
  13. கருவேப்பிலை
  14. உளுந்து

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தோசை 'டாப்பிங்ஸ்'க்கு சட்னி செய்ய வேண்டும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய், வரமிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.

  2. 2

    பின் புளி,தேங்காய்த் துருவல் மற்றும் மல்லித்தழை சேர்த்து கிளறவும்.

  3. 3

    வறுத்தவற்றை ஆற வைத்து,நாட்டு சர்க்கரை மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

  4. 4

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் தாளித்துக் கொட்ட வேண்டும். தோசைக்கு டாப்பிங்ஸ் ரெடி.

  5. 5

    இனி,அடுப்பில் தோசைக் கல் சூடானதும் ஒரு கரண்டி மாவு ஊற்றி, தோசையாக வார்க்கவும். ஒருபுறம் வேகவைத்தால் போதும். மூடி போட்டு வேக வைக்கவும்.

  6. 6

    பின்னர், அதில் தாளித்த விழுது 2 ஸ்பூன் எடுத்து தேய்த்து ஒரு நிமிடம் விட்டு எடுத்துவிடலாம்.

    அவ்வளவுதான். சுவையான இஞ்சி தோசை ரெடி.

  7. 7

    நாம் அரைத்த விழுதை தோசைக்கு தொட்டு சாப்பிடுவதை விட, தோசை மேல் 'டாப்பிங்ஸ்'போட்டு சாப்பிட்டால்,உளுத்தம் பருப்புடன் சேர்த்து சாப்பிடும்பொழுது ரொம்ப சுவை யாக இருக்கும்.

  8. 8

    அதே நேரத்தில் நல்லா காரமாக இருக்கும். எனவே, குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றால் 1 மிளகாய் குறைத்துக் கொள்ளலாம்.

    இஞ்சி சட்னி என்றால், சிறிது கசப்பு தெரியும்.அதனால்தான் இங்கு,காரம்,இனிப்பு சேர்த்துள்ளது.
    நீங்களும் முயன்று பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes