தபேலி ப்ரைரம்ஸ்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#kilangu
இந்த புதிய வகையான ஸ்டார்டர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்

தபேலி ப்ரைரம்ஸ்

#kilangu
இந்த புதிய வகையான ஸ்டார்டர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  2. 1 டீஸ்பூன் சீரகம்
  3. 1 டீஸ்பூன் பெருங்காயம்
  4. 4 டேபிள் ஸ்பூன் தபேலி மசாலா
  5. 2 கப் உருளைக்கிழங்கு
  6. 1 டீஸ்பூன் சர்க்கரை
  7. 4 டேபிள் ஸ்பூன் புளி சட்னி
  8. 1 டேபிள்ஸ்பூன் கார சட்னி
  9. 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  10. 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  11. 2 டேபிள் ஸ்பூன் மசாலா கல்ல
  12. 2 டேபிள் ஸ்பூன் மாதுளம்பழம்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    சிறிய உருளைக்கிழங்கு குக்கரில் வேக வைத்து எடுத்து பின்னர் அதை நன்றாக மசித்துக்கொள்ளவும்

  2. 2

    காரச் சட்னி செய்ய 4 மிளகாய்களை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும் பின்னர் 7 பூண்டு பற்கள் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர்விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    புளி சட்னி செய்ய 50 கிராம் புளியை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக 4 -5 நிமிடம் கொதிக்கவிடவும் பின்னர் அந்த புள்ளியை வடிகட்டிக்கொள்ளவும்

  4. 4

    ஒரு பேன் எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து பின்னர் இந்த வடிகட்டிய புளியை ஊற்றி நன்றாக வேக வைக்கவும் 500 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும் பின்னர் 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு

  5. 5

    தபேலி மசாலா செய்ய 2 துண்டு பட்டை 2 ஏலக்காய் ஐந்து குறுமிளகு 2 டேபிள்ஸ்பூன் சீரகம் 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை 8 கிராம்பு ஒரு கடாயில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும் மிக்ஸி ஜாரில் இந்த அனைத்து மசாலாவையும் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் சீரகம்,1 டேபிள்ஸ்பூன் பெருங்காயம், 4 டேபிள்ஸ்பூன் தபேலி மசாலா மற்றும் மசித்த உருளைக்கிழங்கு, 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள்ஸ்பூன் புளி சட்னி, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்

  7. 7

    மசாலா ஆறியவுடன் நறுக்கிய கொத்தமல்லி, 2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய், 2 டேபிள்ஸ்பூன் மாதுளம்பழம், 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய நடக்கல்லை, 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1 டேபிள்ஸ்பூன் கார சட்னி, 2 டேபிள்ஸ்பூன் புளி சட்னி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  8. 8

    குடலை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  9. 9

    நாம் பொறித்து எடுத்த குடலில் இந்த மசாலாவை ஸ்டப் செய்து அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes