சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவை வெறும் கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் தண்ணீர் வைத்து தேங்காய் எண்ணெய் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இப்பொழுது வறுத்த அரிசிமாவை சேர்த்து கிளறவும்.
- 3
அரிசிமாவு தண்ணீரை உறிஞ்சி கெட்டியானவுடன் இறக்கி ஆறவிடவும்.
- 4
இப்பொழுது ஆறின மாவை நன்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து உருட்டி வைக்கவும்.
- 5
அதை சப்பாத்தி போல் இட்டு ஒரு வட்ட வடிவ தட்டால் நடுவில் வைத்து ரவுண்டாக கட் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
இப்பொழுது அதை சப்பாத்தி கல்லில் போட்டு மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வேகவிட்டு போட்டு எடுக்கவும்.
- 7
இப்பொழுது அருமையான அரிசி பத்திரி ரெடி. இதற்கு காரமாக சட்டினி அல்லது தொக்கு வைத்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15237087
கமெண்ட் (2)