எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 1 கப்வாழைத்தண்டு
  2. 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  3. 1 துண்டு பட்டை
  4. 2 கிராம்பு
  5. 2 ஏலக்காய்
  6. 2 வர மிளகாய்
  7. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. 1 டேபிள்ஸ்பூன் சோம்பு
  9. 5 பல் பூண்டு
  10. 1 கொத்து கருவேப்பிலை
  11. 1 பெரிய வெங்காயம்
  12. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  13. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை ஒரு குக்கரில் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து

  4. 4

    பிறகு பூண்டு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து

  5. 5

    வர மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    வதக்கி வைத்த மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து அதனுடன் வேக வைத்த வாழைத்தண்டு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    பிறகு அரைத்த கலவையில் பொடி செய்த கடலைப்பருப்பை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும் பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  8. 8

    பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த கோலா உருண்டைகளை சேர்த்து பொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும்

  9. 9

    சுவையான வாழைத்தண்டு கோலா உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes