கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு பொரியல்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பேர்
  1. 1/4கி பீன்ஸ்
  2. 1கேரட்
  3. 1உருளைக்கிழங்கு
  4. 1பெரிய வெங்காயம்
  5. தேவையானஅளவுஉப்பு
  6. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  7. தாளிக்க:
  8. கடுகு
  9. கறிவேப்பிலை
  10. உளுந்து
  11. வரமிளகாய்
  12. 2ஸ்பூன் கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு மூன்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    பீன்ஸை விட கேரட்டின் அளவு குறைவாக இருக்கவேண்டும். இல்லையெனில் பொரியல் இனிக்கும்.

  2. 2

    நறுக்கிய உருளைக்கிழங்கை, அதிலுள்ள ஸ்டார்ச் குறையகுறைந்தது 20 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற விடவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, வர மிளகாய் தாளித்து,பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும்,நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

  5. 5

    மீடியம் தீயில் வைத்து, அடிக்கடி கிளறி மூடி வைத்து வேக வைக்கவும்.

  6. 6

    கேரட் மற்றும் பீன்ஸ் நன்றாக வதங்கி சுருங்குவதற்கு 15 நிமிடங்கள் ஆகும். நன்றாக வதங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.

  7. 7

    தேவையான உப்பு சேர்க்கவும். அடிக்கடி கிளறிவிடவும். 10 நிமிடங்களில் உருளைக்கிழங்கு வெந்துவிடும்.

  8. 8

    இன்னும் 5 நிமிடங்கள் நன்றாக கிளறவும். பின்னர் (விருப்பப்பட்டால்) கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.

  9. 9

    அவ்வளவுதான். சுவையான கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.

    இது சாம்பார், காரக்குழம்பு இவற்றிற்கெல்லாம் நல்ல காம்பினேசன் ஆகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes