சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#kilangu
ஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் phyto chemicals. முக்கியமாக Quercetin பற்று நோய் உண்டு செய்யும் (carcinogens) பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும். இன்று சாப்ஸ் ரோஸ்ட் வேறுவிதமாக செய்தேன்.எண்ணை ஸ்பைஸ் பொடிகள். புளி சேர்த்து மெரிநெட் (marinade)செய்து ருசியான சாப்ஸ் ரோஸ்ட் செய்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 6சேப்பங்கிழங்கு (medium size)
  2. மெரிநெட்
  3. 1மேஜை கரண்டி நல்லெண்ணெய்
  4. 1தேக்கரண்டி கடுகு
  5. 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  6. 1/2தேக்கரண்டி வெந்தய பொடி
  7. 1/2தேக்கரண்டி மஞ்சள் பொடி
  8. 1/2தேக்கரண்டி பெருங்காயப் பொடி
  9. 1தேக்கரண்டி சீரகப்பொடி
  10. 1தேக்கரண்டி தனியாபொடி
  11. 1தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி
  12. 2 தேக்கரண்டி மிளகாய் பொடி
  13. 2தேக்கரண்டி புளி பேஸ்ட்
  14. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்

  2. 2

    சேப்பங்கிழங்கை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்க்காமல் நீராவியில் வேகவைக்க. பிரஷர் குக்கரை ஹை விலேமின் மேல் வைக்க. பிரஷர் ஏறின பின் குண்டு சுத்தும். நெருப்பை சிம்மர் செய்க. கிழங்கு 70%வெந்தால் போதும், குழைய கூடாது. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க. வேகவைத்த பொருட்களை வெளியே எடுத்து ஆற வைக்க. கிழங்கின் தோலை உறிக்க.
    மெரிநெட்: மிதமான நெருப்பின் மேல் அடிகனமான கடாயில் சூடான எண்ணையில கடுகு, சீரகம், போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.. எல்லா ஸ்பைஸ் பொடிகளையும் சேர்க்க.

  3. 3

    புளிபேஸ்ட்டை ¼ கப் தண்ணீரில் கரைத்து கடாயில் சேர்க்க. உப்பு சேர்க்க. நெருப்பை சிம்மர் செய்க. புளி காய்ச்சல் போல சிறிது கெட்டியாகட்டும். அடுப்பை அணைக்க செப்பங்கிழங்கை சேர்க்க. எல்லா பக்கங்களிலும் மெரிநெட் கோட் (coat) ஆகட்டும், 30 நிமிடங்கள் ஊறட்டும்.

  4. 4

    பின் குறைந்த நெருப்பின் மேலே இந்த கடாயிலேயே ரோஸ்ட் செய்க. அப்போ அப்போ மெல்ல திருப்புக. 10-15 நிமிடங்களில் ரோஸ்ட் முடியும்.
    ருசித்து பரிமாறுக. பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் தேவாமிருதம்தான்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes