பொட்டு கடலை மாவு மசால்(kadalai maavu masal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ed1
மசாலுக்கு அல்லது கடப்பா குழம்பில் கடலை மாவு சேர்க்காமல் பொட்டு கடலையை மிக்ஸியில் பவுடராக்கி கடைசியில் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.பூரி கிழங்குக்கு கூட இப்படி தூவி விட்டு செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 1பெரிய சைஸ் தக்காளி
  3. 4அல்லது5பச்சை மிளகாய் (காரத்திற்கு ஏற்ப)
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1கைப்பிடி பொட்டுக்கடலை
  6. தேவையான அளவுஉப்பு
  7. தாளிக்க
  8. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  9. 1/2ஸ்பூன் கடுகு
  10. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  11. 1இணுக்கு கறிவேப்பிலை
  12. 1டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கைப்பிடி அல்லது அதற்கு மேல் சிறிதளவு பொட்டுக்கடலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் நைசாக பவுடராக அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகை போட்டு பொரியவிடவும்.கடுகு பொரிந்தவுடன் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் தாளித்துக் கொள்ளவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.(வெங்காயம், தக்காளி நிறம் மாறாமல் வதக்கிக் கொள்ளவும்.) தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அதன்பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இவற்றை மூடி வைத்து வெங்காயம் வேகும் வரை விடவும். குழைய வேகவிட வேண்டாம்.பிறகு அரைத்த பொட்டுக்கடலை மாவை தண்ணீர் சிறிது சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும் இதை வெந்த வெங்காய கலைவயில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கடைசியாக கொஞ்சம் கருவேப்பிலை ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இந்தப் பொட்டுக்கடலை மாவு மசாலா இட்லி தோசை சப்பாத்தி பூரி கோதுமை தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். ஹெல்தி யும் கூட.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes