பாகற்காய் தொக்கு/ bittergourd thokku recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வெங்காயம் கண்ணாடி போல ஆனவுடன் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து நன்கு துவள வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு அரை கப் நீர் விட்டு மூடியிட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
- 4
பாகற்காய் நன்கு துவள வெந்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பாகற்காய் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
பாகற்காய் வேர்க்கடலை வருவல் (Paakarkai verkadalai varuval recipe in tamil)
#arusuvai6 வேர்க்கடலைக்கு பதில் இட்லி மிளகாய்ப்பொடி கூட உபயோகிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பிசிபேளாபாத்
#keerskitchenபிஸிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல் ஒன் பாட் ரெசிபி. மசாலா அரைத்து சேமித்து வைத்திருந்தால் செய்வது மிக எளிது. Nalini Shanmugam -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd kulambu recipe in tamil)
பவர் காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இவ்வாறு செய்தால் Joki Dhana -
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#GA4 #week 7 தக்காளி தொக்கு இதை தோசை, சப்பாத்தி,பூரி,இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.சீக்கீரம் செய்திடலாம். Gayathri Vijay Anand -
-
-
-
Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)
#arusuvai4 டக்குனு ஒரு சைடிஷ் செய்யனும் என்றால் இந்த தக்காளி தொக்கு செய்து பாருங்கள்.புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். குயிக் அண்ட் ஈஸி சைடிஷ். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)