காராமணி குழம்பு

manu
manu @nidhu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 150 கிராம்காராமணி
  2. 100 கிராம்கத்தரிக்காய்
  3. நான்குவெங்காயம்
  4. 2தக்காளி
  5. கால் கப்பூண்டு
  6. 3 ஸ்பூன்மிளகாய் தூள்
  7. நெல்லிக்காய் அளவுபுளி
  8. கடுகு, வெந்தயம் - தாளிக்க
  9. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய்த் துருவல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் காராமணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதியளவு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கிக்கொள்ளவும் அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்றாகக் குழைய வதக்கவும். பின்னர் அதனுடன் அறிந்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    புளியை நன்கு கரைத்து இதனுடன் சேர்க்கவும். வேக வைத்துள்ள காராமணியும் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பின்னர் வதக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்து அதனை குழம்புடன் சேர்க்கவும்.

  4. 4

    5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். சுவையான சத்தான காராமணி குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes