திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)

எப்பொழுதும் செய்யக் கூடிய பிரியாணியை விட,இதில் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் என அனைத்தையும் அரைத்து சேர்ப்பதினால், செய்முறையானது சுலபமாகவும்,சுவை அருமையாகவும் உள்ளது.
நான் இங்கு பாசுமதி அரிசியை பயன்படுத்தியுள்ளேன்.
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
எப்பொழுதும் செய்யக் கூடிய பிரியாணியை விட,இதில் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் என அனைத்தையும் அரைத்து சேர்ப்பதினால், செய்முறையானது சுலபமாகவும்,சுவை அருமையாகவும் உள்ளது.
நான் இங்கு பாசுமதி அரிசியை பயன்படுத்தியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை நன்றாக 2 முறை கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவிட்டு,தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
- 2
மசாலா 1-ல் கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
மசாலா 2-ல்அரைக்க கொடுக்கப்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜார் கழுவிய தண்ணீரை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- 4
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்,நெய் விட்டு சூடானதும் வெங்காயம்(மசாலா2) அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வதங்கியதும் அரைத்த (பிரியாணி) மசாலா1 சேர்க்கவும்.அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போனதும் தயிர் சேர்த்து கிளறவும். பின்னர் சிக்கன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 6
5-7 நிமிடங்களுக்கு நன்றாக கிளறிவிடவும்.நன்றாக கிளறினால் தான் கவுச்சி வாசம் போகும்.
- 7
2.5கப் பாஸ்மதி அரிசிக்கு 5கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.சிக்கன் மட்டன் பிரியாணிக்கு 1கப் தண்ணீர் குறைத்துக்கொள்ள வேண்டும். எனவே 4கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- 8
இதில் மிக்ஸியை கழுவிய தண்ணீர் 1கப் இப்பொழுது சேர்த்து சிறுதீயில் வைத்து 10 நிமிடங்கள் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
- 9
இச்சமயத்தில் உப்பு காரம் சரிபார்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து மீதியுள்ள 3கப் தண்ணீர் சேர்த்து மீடியம் தீயில் கொதிக்க விடவும்.
- 10
கொதித்ததும்,அரிசி மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறிவிடவும்.
- 11
மீடியம் தீயில் மூடி போட்டு வேகவிடவும். உப்பு,காரம் சரிபார்க்கவும். உப்பு சிறிதளவு அதிகமாக இருந்தால் தான் சாப்பிடும் பொழுது சரியாக இருக்கும்.
- 12
இப்பொழுது சாதம் முக்கால் பதம் வெந்தது விட்டது. தண்ணீர் எல்லாம் வற்றி இருக்கும்.
- 13
இந்த சமயத்தில் பாத்திரத்தை சிறிய அடுப்புக்கு மாற்றி, அதனை தோசைக்கல் மேல் வைக்கவும்.
இப்பொழுது புதினா இலைகள் மற்றும் நெய் சேர்த்து கிளறி விட்டு,பாத்திரத்தின் மேல் ஒரு கனமான பொருளை வைத்து 25 நிமிடங்களுக்கு சிறு தீயில் வைக்கவும்.
- 14
25 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து, பாத்திரத்தை வேறு இடத்திற்கு மாற்றி விடவும்.
அதை திறந்து பார்த்தால் சாதம் நன்றாக வெந்து உதிரியாக வாசனையாக இருக்கும்.
- 15
இந்நிலையில் நெய் வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான். சுவையான திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி ரெடி.
- 16
பெரிய வெங்காயம் நன்றாக மெல்லியதாக நறுக்கி தயிர்,உப்பு, மல்லித்தழை கலந்து தயிர் வெங்காயம் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
தொன்னை பிரியாணி(thonnai biryani recipe in tamil)
#CF8இது பெங்களூரு பிரியாணி. Simple and tasty biriyani.சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியில் மிளகாய் தூள் மிகக் குறைவாகவும்,மிளகாய் அதிகமாகவும் சேர்ப்பது தான், வித்தியாசமான சுவை மற்றும் காரம் கொடுத்து,இதன் தனித்துவத்தை காண்பிக்கின்றது. Ananthi @ Crazy Cookie -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள் Sasipriya ragounadin -
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
-
தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி
#onepot தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி மற்ற அனைத்து பிரியாணிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒரு நல்ல சுவையை கொண்டுள்ளது. இது சீராகா சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. சீராகா சம்பா பிரியாணி தமிழ்நாட்டின் பெருமைக்குரியது. இந்த பிரியாணி தயாரிப்பதற்கு புதிய பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் புதிய மசாலா கோழி பிரியாணியின் சுவையையும் மேம்படுத்துகிறது. Swathi Emaya -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
சென்னை சிக்கன் பிரியாணி
#vattaramமிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி! Mammas Samayal -
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala
More Recipes
கமெண்ட் (2)