சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#npd4
மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 2துண்டு சுக்கு
  2. 4ஸ்பூன் மல்லி விதை
  3. 10மிளகு
  4. 2ஏலக்காய்
  5. தேவையான அளவுநாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    சுக்கை நன்றாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெறும் வாணலியில் முதலில் மல்லி விதையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து மிளகு,சுக்கு,ஏலக்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.

  3. 3

    இவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

    மையாக அரைத்தால் குடிக்க முடியாது. வாசனையும்,காபியும் திகட்டும்.

    அரைத்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு,தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து,2-3ஸ்பூன் (தேவைக்கேற்ப) அரைத்த பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

    (சுக்கு மிளகு காரத்திற்கேற்ப பொடியில் அளவை நாம் கூட்டி, குறைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.)

  5. 5

    5நிமிடங்கள் நன்றாக கொதித்ததும், சுவைக்கேற்ப நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும்.

  6. 6

    2நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி பரிமாறலாம்.

  7. 7

    அவ்வளவுதான்.
    சளி இருமலுக்கு நிவாரணியாக சுக்கு மல்லி காபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes