* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ்,

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
5 பேர்
  1. 11/2 கப்சம்பா ரவை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. சிறிய1குட மிளகாய்
  5. சிறிய1உருளை கிழங்கு
  6. 1பெரிய கேரட்
  7. 4ப.மிளகாய்
  8. 1 டீஸ்பூன்கடுகு
  9. 1 ஸ்பூன்உ.பருப்பு
  10. 1ஸ்பூன்க.பருப்பு
  11. 4டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  12. ருசிக்குக.உப்பு
  13. 1 ஸ்பூன்பெருங்காயத் தூள்
  14. 5 கப்தண்ணீர்
  15. 2 ஆர்க்குகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.

  2. 2

    கடுகு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பை போடவும்.பருப்பு சிவந்ததும், வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.வதங்கியதும், தக்காளி, ப.மிளகாய், போடவும்.

  3. 3

    வதங்கியதும், உருளை கிழங்கை போட்டு வதக்கவும்.பின் கேரட்டை போடவும்.அடுத்து குட மிளகாயை போடவும்.

  4. 4

    பின் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.வெந்ததும் மூடியை எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    காய்கறி நன்கு வெந்ததும் கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும்.பின் கறிவேப்பிலையை போடவும்.அடுப்பை சிறியதாக்கி விட்டு பின்பு சம்பா ரவையை போட்டு கட்டி தட்டாமல் நன்கு வெந்ததும், பெருங்காயத் தூள் போடவும்.

  6. 6

    5 நிமிடம் மூடி போட்டு ஒன்று சேர நன்கு வெந்து உதிரியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு பௌலில் மாற்றவும்.

  7. 7

    இப்போது சுடசுட,* சம்பா ரவை வெஜ் உப்புமா* தயார்.இது மிகவும் ஆரோக்கியமானது.சுவையானது.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
I made the uppuma with bulgar wheat rava, carrots, peas, onions etc in Vaanali. Garnished with cashews. A healthy recipe/

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes