எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  1. 250 கிராம் வரகரிசி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. இரண்டு பச்சை மிளகாய்
  5. இரண்டு வரமிளகாய்
  6. சிறிதளவுபுதினா இலைகள்
  7. சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
  8. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. கால் ஸ்பூன் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி
  10. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. அரை ஸ்பூன் கரம் மசாலா
  12. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. தேவையானஅளவு எண்ணெய் மற்றும் நெய்
  14. ஒரு ஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வரகரிசியை கல் நீக்கி நன்கு அரித்து சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது தயாராக்கவும்.

  4. 4

    குக்கரை அடுப்பிலேற்றி மிதமான தீயில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி சேர்த்து அதன் பின்னே ஒவ்வொன்றாக வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பிறகு பொடி வகைகளான மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    தக்காளி வெங்காயம் நன்கு வதங்கி இஞ்சி-பூண்டு கலவையின் வாசம் நீங்கிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (1:2) கொதிக்க விடவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது சுத்தம் செய்த வரகரிசியை சேர்த்து அதனுடன் புதினா கொத்தமல்லி இலைகள் சேர்த்து குக்கர் மூடும் பொழுது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கினால் அருமையான சுவையான உடல் ஆரோக்கியத்தை தரும் வரகு தக்காளி சாதம் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes