வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)

வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை கழுவி சிறிது உப்பு போட்டு 5 விசில் விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஆயில், நெய் ஊற்றி பட்டை, கிராம்பூ, அன்னாசிபூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு அதில் நருக்கிய வெங்காயம் போட்டு கொல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு புதினா போட்டு வதக்கவும்.
- 3
பிறகு அதில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். அடுத்து மட்டன், மிளகாபொடி, மல்லிபொடி போட்டு வதக்கவும்.
- 4
வரகரிசி ஒன்றரை அரைக்கால் இருந்தது, இரண்டரை அரைக்கால் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உப்பு போட்டு சரிபார்த்து மூடி வைக்கவும். கொதித்ததும் வரகரிசி போடவும்.
- 5
15 நிமிடங்கள் மூடி வைத்தால் பிரியாணி ரெடி. இடையில் கிளரிவிடவேண்டும், அடி பிடிக்கும். எப்பொதும் நான் வரகரிசிலதான் பிரியாணி செய்வேன். அரிசியை விட மிகவும் சுவையாக இருக்கும். ஆரோக்கியமான உணவு. நன்றி.
Similar Recipes
More Recipes










கமெண்ட்