* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CF6
அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)

#CF6
அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
4 பேர்
  1. 2 கப்வெள்ளை கெட்டி அவல்
  2. கோலி குண்டளவுபுளி
  3. 1 சிட்டிகைம.தூள்
  4. 4 ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  5. 1 டீ ஸ்பூன்கடுகு
  6. 1 ஸ்பூன்உ.பருப்பு
  7. 1 ஸ்பூன்க.பருப்பு
  8. 4சி.மிளகாய்
  9. 3 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  10. ருசிக்குஉப்பு
  11. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  12. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  13. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    அவலை வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    புளியையும் தனியாக ஊற வைக்கவும்.பின் நன்கு கரைத்து வடிகட்டவும்.ஊறின அவலை சிறிது கூட தண்ணீர் இல்லாமல் பிழிந்து க் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.கடுகு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு போடவும்.பருப்புகள் சிவந்ததும், மிளகாய் தாளிக்கவும்.

  4. 4

    பின் வடிகட்டிய புளித் தண்ணியை விடவும்.பிறகு ம.தூள், காஷ்மீரி மி.தூள் போட்டு கொதிக்க விடவும்.புளி தண்ணி நன்கு கொதித்ததும், அடுப்பை சிறியதாக்கி, பிழிந்து வைத்த அவலை போடவும்.

  5. 5

    பின் மூடி போட்டு வேக விடவும்.5 நிமிடம் கழித்து மூடியை எடுத்து விட்டு கறிவேப்பிலை போடவும்.அதன் பின் பெருங்காயத் தூள் போடவும்.

  6. 6

    அடுத்ததாக நன்கு கிளறவும்.பிறகு பௌலில் மாற்றவும்.இப்போது புளிப்பு, காரத்துடன், சுவையான, * போஹா புளி உப்புமா* தயார்.செய்து பார்த்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes