வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#cf9
இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhouse
https://youtu.be/bs72kDROgOI

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 நபர்கள்
  1. ப்ரெட் மாவு தயாரிக்க தேவையானவை:
  2. 280 கிராம் மைதா மாவு
  3. 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  4. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  5. 2 தேக்கரண்டி பொடித்த சர்க்கரை
  6. 1/3 கப் உப்பு சேர்த்த வெண்ணை
  7. 3/4 கப் தயிர்
  8. பில்லிங் தயாரிக்க:
  9. 4 மேஜைக்கரண்டி பிரவுன் சுகர்
  10. 1 தேக்கரண்டி பட்டை தூள்
  11. 2 மேஜைக்கரண்டி நறுக்கிய வால்நட்
  12. 2 மேஜை கரண்டி வெண்ணை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் மாவு பிசைய குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும் இதில் வெண்ணையை உருக்கி ஆறவிட்டு சேர்க்கவும். இந்த மாவை லேசான கைகளால் அழுத்தம் இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவை ஸ்டிரேட்ச் அண்ட் போல்ட் முறையில் 10 நிமிடம் பிசையவும். பிறகு இதை எண்ணை தடவிய கிண்ணத்தில் வைத்து மூடி போட்டு காற்று புகாமல் 30 நிமிடம் வைக்கவும்.

  3. 3

    பில்லிங் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வால்நட் எடுத்துக்கொள்ளவும் மற்றொரு கிண்ணத்தில் பிரவுன் சுகர் மற்றும் பட்டை தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அரை மணி நேரம் கழித்து மாவை மூன்று பகுதிகளாக பிரிக்கும் ஒரு பகுதியே சிறிதும் திக்காக தேய்த்து வெண்ணை தடவிய பேக்கிங் தட்டில் வைக்கவும். இதன் மேல் பாதி அளவு பிரவுன் சுகர் கலவையை தூவி அதற்கு மேல் பாதி அளவு வால்நட்டை தூவவும். மற்றொரு பகுதி மாவை வைத்து இதற்குமேல் விரிக்கவும். முன்பு கூறியபடி பிரவுன் சுகர் மற்றும் வால்நட் தூவவும் ‌ இதன்மேல் மூன்றாவது பகுதி மாவை வைத்து மூடவும். இப்பொழுது ஓரங்களில் கைகளால் அழுத்தி மூடவும்.

  5. 5

    நடுவில் ஒரு சின்ன வட்ட கிண்ணம் வைக்கவும். மீதியுள்ள வட்டத்தை நான்காகப் பிரிக்கவும். பிறகு இவற்றை சரியான பங்குகளாக 16 பகுதிகளாக பிரிக்கவும்.

  6. 6

    ஒரு பகுதியை உள்பக்கமாக இரண்டு முறை சுற்றவும். மற்றொரு பகுதியை வெளிப்பக்கமாக இரண்டு முறை சுற்றவும். இந்த இரண்டின் ஓரங்களை தண்ணீர் தொட்டு அழுத்தி விடவும். இவ்வாறு அனைத்து பகுதிகளையும் இரண்டு இரண்டாக சேர்த்து ஒட்டவும்.

  7. 7

    தயாரான பின் நடுவில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து விட்டு ஓவனை 15 நிமிடங்கள் 220 டிகிரி செல்சியஸில் ப்ரீ ஹீட் செய்து அதே சூட்டில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  8. 8

    பேக் செய்தபின் வெண்ணையை கொண்டு சூடான பிரெட்டின் மேல் தடவி அதன் மேல் ஒரு துண்டை போட்டு மூடி 20 நிமிடம் ஆற விடவும். பிறகு சாக்லெட் சாஸ் உடன் பரிமாறவும்.

  9. 9

    இந்தப் இரண்டு நீங்கள் விருப்பப்பட்ட பில்லிங்கை வைத்து தயார் செய்யலாம். சுவையான இனிப்பான இந்த பிரோடு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes