Christmas diamond biscuits🌲🎅⭐🤶🎁🇨🇽💡

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#cf9
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்தவர்கள் இந்த டயமண்ட் பிஸ்கட் கட்டாயம் செய்வார்கள். நான் எனக்கு தெரிந்தவர் வீட்டில் கிறிஸ்மஸ் சமயம் போய் இந்த பிஸ்கட் செய்வதற்கு அவர்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். அதனால் இந்த பிஸ்கட்டை இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு cookpad போட்டிக்கு செய்து உள்ளேன். மிகவும் சுவையாகவும் அதேசமயம் மொறுமொறுப்பாகவும் இருக்கும். மாலை நேரம் காபி டீயுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.வெறும் கோதுமை மாவு அல்லது வெறும் மைதா மாவு அல்லது இரண்டும் சம அளவு எடுத்து இந்த பிஸ்கட் செய்யலாம்.

Christmas diamond biscuits🌲🎅⭐🤶🎁🇨🇽💡

#cf9
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்தவர்கள் இந்த டயமண்ட் பிஸ்கட் கட்டாயம் செய்வார்கள். நான் எனக்கு தெரிந்தவர் வீட்டில் கிறிஸ்மஸ் சமயம் போய் இந்த பிஸ்கட் செய்வதற்கு அவர்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். அதனால் இந்த பிஸ்கட்டை இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு cookpad போட்டிக்கு செய்து உள்ளேன். மிகவும் சுவையாகவும் அதேசமயம் மொறுமொறுப்பாகவும் இருக்கும். மாலை நேரம் காபி டீயுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.வெறும் கோதுமை மாவு அல்லது வெறும் மைதா மாவு அல்லது இரண்டும் சம அளவு எடுத்து இந்த பிஸ்கட் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
1/4 kms அளவு
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1கப் மைதா மாவு
  3. தேவையான அளவுதூள் உப்பு
  4. 1ஸ்பூன் ஓமம்
  5. 1ஸ்பூன் கருப்பு எள்ளு அல்லது வெள்ளை எள்ளு
  6. 1/2ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  7. 4 பல் பூண்டு
  8. 6 வர மிளகாய்
  9. 1சட்னி கரண்டி அளவு உருக்கிய வெண்ணெய்
  10. 1டேபிள்ஸ்பூன் நெய்
  11. 1கைப்பிடி அளவுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  12. தேவையான பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு மற்றும் கோதுமை மாவு தலா ஒரு கப் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் நன்றாக சலித்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்று சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளவும்

  2. 2

    பிறகு இதில் கருப்பு எள்ளு ஒரு ஸ்பூன் அளவிற்கு மண்ணில்லாமல் கழுவி எடுத்துக் கொள்ளவும். கருப்பு எள்ளு இல்லை என்றால் வெள்ளை எள்ளு சேர்த்துக்கொள்ளலாம் நான் வெள்ளை எள்ளு தான் இன்று சேர்த்தேன். மேலும் ஒரு ஸ்பூன் ஓமம் நன்கு பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தூள் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளவும்.6 வரமிளகாய் மற்றும் நான்கு பூண்டுப் பல் மிக்ஸியில் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த வரமிளகாய் விழுது மற்றும் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். உருக்கிய வெண்ணையை மாவில் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்

  4. 4

    இப்போது மாவை ஒரு கைப்பிடி எடுத்து இறுக்க பிடித்தால் கொழுக்கட்டை பிடிப்பது போல வரும். இது சரியான பதம். படத்தில் காட்டி உள்ளேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பூரி மாவு பிசைவது போல கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மேலே ஒரு டேபிள்ஸ்பூன் நெய் தடவி 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

  5. 5

    இப்போது அடுப்பு திட்டை சுத்தம் செய்து விட்டு அதில் வெறும் மாவை கோதுமை அல்லது மைதா மாவு தூவி விடவும். பிசைந்த மாவு இரண்டு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை அதில் வைத்து மிகவும் மெலிதாக தேய்த்துக் கொள்ளவும்..ஓரம் கூட மிகவும் மெலிதாக தேய்த்துக் கொள்ளவும்.

  6. 6

    படத்தில் காட்டியுள்ளபடி மிகவும் மெலிதாக தேய்த்தபின் பீட்சா கட்டர் வைத்து அல்லது கத்தி வைத்து டைமண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும். அழுத்தமாக கட் செய்யவும்.

  7. 7

    இப்போது கத்தி அல்லது பீட்சா கட்டர் வைத்து லேசாக தள்ளி விட்டால் தனித்தனியாக பிரிந்து கொள்ளும். இவற்றை போலவே இன்னொரு உருண்டை மாவையும் தேய்த்து டைமண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும். இரண்டையும் ஒரு பேப்பரில் சேர்த்து வைத்துக் கொள்ளவும்அடுப்பில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய்ந்த உடன் எண்ணெய் கொள்ளும் அளவிற்கு கட் செய்த பிஸ்கட் மாவை தூவி விடவும். இருபுறமும் நன்கு திருப்பி விட்டு சிவக்க எடுக்கவும். தீயை தேவையான அளவு அவ்வப்போது குறைத்து கூட்டி வைத்துக் கொள்ளவும்.

  8. 8

    சத்தம் அடங்கியவுடன் தேவையான அளவு சிவக்க விட்டு அரிகரண்டி வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும். சுவையான டயமண்ட் பிஸ்கட் ரெடி. வீட்டிலேயே நாம் செய்வதால் எண்ணெய் அதிகம் குடிக்காது. அதே சமயம் பிஸ்கெட் நிறைய கிடைக்கும். சொல்லிய அளவிற்கு 1/4 கிலோ அளவிற்கு மேல் பிஸ்கெட் கிடைக்கும்.

  9. 9

    இந்த கிறிஸ்துமஸை குழந்தைகளுடன் டைமண்ட் பிஸ்கட் மற்றும் கேக் வகைகள் பிஸ்கட் வகைகள் செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.கிறிஸ்மஸ் என்றால் கிறிஸ்தவர்கள் தான் கொண்டாட வேண்டும் என்பது இல்லை நாமும் அவர்களுடைய பாரம்பரிய இனிப்பு கார வகைகளை செய்து கொண்டாடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes