டபுள் லேயர் சாக்கோ வேர்க்கடலை பர்ஃபி (Double layer peanut burfi recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4நபர்கள்
  1. 2கப் வேர்க்கடலை
  2. 1கப் சர்க்கரை
  3. 2டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  4. 1/4கப் மில்க் பவுடர்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    வெறும் வாணலியில் வேர்க்கடலையை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.. அதை ஆற விட்டு தோல் நீக்கி பல்ஸ் மோடில் அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    தொடர்ந்து அரைத்தால் அதில் எண்ணெய் வெளியே வந்துவிடும் அப்புறம் சுவை நன்றாக இருக்காது... அரைத்த வேர்க்கடலையை நன்றாக சலித்துக் கொள்ளவும் அத்துடன் பால் பவுடரையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்

  4. 4

    பதம் வந்ததும் அத்துடன் வேர்க்கடலை பொடியையும் சேர்த்து நன்றாக கிண்டவும்

  5. 5

    நன்றாக சுருண்டு வந்ததும் அதில் பாதி அளவு எடுத்து தனியாக வைத்து விட்டு மீதியில் கோகோ பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  6. 6

    கோகோ பவுடரையும் சேர்த்து நன்றாக சுருண்டு வந்ததும் இரண்டையும் தனித்தனியாக ஆறவைத்து ஒன்றாக லேயராக செய்யவும்

  7. 7

    விருப்பபட்டால் மேலே சில்வர் லீப் ஒட்டி அழகுபடுத்திக் கொள்ளலாம்...

  8. 8

    இப்போது அருமையான சுவையான டபுள் லேயர் சாக்கோ வேர்கடலை பர்பி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes