சிக்கன் வறுவல் (Chicken varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி கொள்ளவும். கிளீன் செய்த சிக்கனை ஒரு கடாயில் சேர்த்து, பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- 2
இப்போது அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவுக்கு உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாய் மூடிவிட்டு சிக்கனை 15-20 நிமிடம் வேகவிடவும்.
- 3
வெந்த பிறகு சிக்கனை தனியாக எடுத்து இன்னொரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மசாலா கலந்த இந்த ஸ்டாக் வாட்டர் (stock water) தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
- 4
இன்னொரு கடாயில் சோம்பு, முழு தனியா, வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து லோ ஃப்லேமில் வறுக்கவும். வறுத்த பின் இதை முழுமையாக ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- 5
இன்னொரு கடாயில் நல்லெண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் பூண்டு சேர்க்கவும். இப்போது அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இப்போது அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்ச வாசனை போகிற வரைக்கும் வதக்கவும். இப்போது அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து லோ ஃப்லேமில் வதக்கவும். இப்போது அதில் தேங்காய் பால் சேர்த்த பின்னர் கொத்துமல்லி சேர்த்து கெட்டியாகும் வரைக்கும் வதக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
- 6
இப்போது சிக்கனை வேக வைத்த ஸ்டாக் வாட்டர் (stock water) சேர்த்து நன்றாக சமைக்கவும், மசாலா நன்றாக கெட்டியான பிறகு சிக்கனை சேர்க்கவும். சிக்கன் சேர்த்து 7- 10 நிமிடம் வரைக்கும் மறுபடியும் சமைக்கவும்.
- 7
இப்போது கொத்துமல்லி தூவி விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும். சுட சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
#wt3பொதுவாக அசைவம் பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி செய்த பள்ளிபாளையம் சிக்கன் மிக மிக ருசியாக இருக்கும். இதில் இஞ்சி-பூண்டு சேர்ப்பதில்லை எனவே சிக்கனில் குணம் மாறாமல் வாசனையுடன் சுவையுடன் அருமையாக இருக்கும். Gowri's kitchen -
ரைஸ் குக்கரில் சுவையான சிக்கன் தம் பிரியாணி (Delicious Chicken Dum Biryani in Rice Cooker)
இனி சப்பாத்தி மாவு பிசைய தேவையில்லை. நாவின் சுவை அரும்புகளை தூண்டும் ருசியான தம் பிரியாணி. இலகுவான முறையில் ரைஸ் குக்கரில் செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.#myfirstrecipe#goldenapron3 Fma Ash -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (hyderabadi chicken biriyani recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிIlavarasi
More Recipes
கமெண்ட்