வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#made2 - favourite..
சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
20 பரிமாறுவது
  1. 1கப் மைதா
  2. 2பொடியாக நறுக்கின வெங்காயம்
  3. 1/4 கப் அவல்
  4. 1பச்சை மிளகாய்
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு
  8. 1கைப்பிடி பச்சை கொத்தமல்லி, கருவேப்பிலை
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மைதை மாவில் 1ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலந்த பிறகு கொஞ்சமாக தண்ணி விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து மூடி வைத்து 20 நிமிடத்துக்கு பிறகு மாவை ஒரே சைஸ் பூரிபோல் விரித்து அதில் மைதா, எண்ணெய் கலந்த கலவையை ஒவொரு பூரி மேல் தடவி ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைத்து அதை பெரிசாக் விரித்து சூடான தோசை தவாவில் 2 செகண்ட்ஸ் இரண்டு பக்கவும் திருப்பி விட்டு எடுத்து ஆறவிட்டு, ஒவொன்றாக பிரித்து.. தேவையான அளவிற்கு கட் செய்து சமோசா சீட் செய்து வைத்துக்கவும்.

  2. 2

    ஒரு பவுலில் வெங்காயம், அவல், பச்சைமிளகாய், மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு, கருவேப்பிலை, கொத்த மல்லி சேர்த்து நன்றாக கலந்து சமோசா ஸ்டபபிங் தயார் செய்துக்கவும்

  3. 3

    சமோசா ஷீட்டை முக்கோண வடிவில் மடித்து ஓரங்களில் மைதா பேஸ்ட் தடவி உள்ளே வெங்காய ஸ்டப்பிங் வைத்து ஓரங்களை மடிச்சு ஒட்டி விடவும்.. சமோசா பொரிப்பதற்கு தயார்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து ஒவொரு சமோசாவாக எடுத்து எண்ணையில் போட்டு நன்கு மொறு மொறுப்பாக சிவந்து வந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.

  5. 5

    கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் மிக மிக ருசியான், குட்டி வெங்காய சமோசா வீட்டில் தயார்.....இதேபோல் வெஜிடபிள், உருளை கிழங்கு, பச்சை பட்டாணி வைத்து வித்தியாசமான விருப்பமான சுவையிலும் ஸ்டப்பிங் செய்யலாம்...சூடான் சமோசாவை டீ, காபியுடன் ருசித்து சுவைக்கவும்....குறிப்பு -சமோசா சீட் செய்முறையை ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன் பார்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes