* கொத்தவரங்காய் பொரியல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe,

* கொத்தவரங்காய் பொரியல்*

சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe,

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
5 பேர்
  1. 2 கப்பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய்
  2. 1/2 கப்பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 1/4 கப்துருவின தேங்காய்
  4. 1 டீ ஸ்பூன்கடுகு
  5. 1 ஸ்பூன்உ.பருப்பு
  6. 1 ஸ்பூன்க.பருப்பு
  7. 3ப.மிளகாய்
  8. 1 ஸ்பூன்ம.தூள்
  9. 1 ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  10. ருசிக்குஉப்பு
  11. 2 ஸ்பூன்எண்ணெய்
  12. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  13. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  14. 1 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  15. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    கடாயில் நறுக்கின கொத்தவரங்காய், ம.தூள், உப்பு போட்டு, குழையாமல், வேகவிடவும்.

  2. 2

    அடுப்பை நிறுத்தியதும்,வெந்த கொத்தவரங்காயை வடிய விடவும். வடிய வைத்த தண்ணீரை கொட்டி விடவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், பெருங்காயத் தூள், போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பின் நறுக்கின வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும், காஷ்மீரி மி.தூள்,கரம் மசாலா தூள்,உப்பு போடவும்.அடுப்பை சிறியதில் வைத்து, வடித்து வைத்த கொத்தவரங்காயை போடவும்.

  6. 6

    நன்கு கிளறி வெந்ததும், துருவின தேங்காய், கறிவேப்பிலை போட்டு ஒன்று சேர கிளறி, 5 நிமிடம் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    பொரியலை ஒரு பௌலில் மாற்றவும். இப்போது,* கொத்தவரங்காய் பொரியல்* தயார்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes