வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 பாக்கெட் அணில் சேமியா
  2. 10 பாதாம் ஊறியது
  3. 2 காய்ந்த பேரிச்சம்பழம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்
  4. 1/4 கப் துருவிய கொப்பரை தேங்காய்
  5. 10 முந்திரி
  6. 2 மேஜை கரண்டி நெய்
  7. 1 துண்டு பட்டை
  8. 1 தேக்கரண்டி கசகசா
  9. தேவையானஅளவு சர்க்கரை
  10. தேவையானஅளவு பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் இதில் அதில் சேமியாவை சேர்த்து 50% வேக விட்டு வடித்து கொள்ளவும் இதனை பரவலாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    முந்திரி பாதாம் காய்ந்த பேரீச்சம் பழம் இவற்றை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    கசகசாவில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கூடவே கொப்பரைத் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.

  4. 4

    சேமியா சேர்த்த பாத்திரத்தின் மேல் தேவையான அளவு பால் ஊற்றிக் கொள்ளவும். கூடவே இனிப்புக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் நெய் சேர்த்து இதில் பட்டை சேர்த்து தாளிக்கவும் கூடவே நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கி சேமியாவின் மேல் பரவலாக சேர்க்கவும். அதன்மேல் கசகசாவை தூவி கொப்பரைத் தேங்காயை நன்றாக தூங்கவும்.

  6. 6

    நல்ல ஆரோக்கியமான இந்த இனிப்பு சேமியா உடம்பிற்கு சத்தான தாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes