எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ஜெல்லி செய்ய:
  2. 8 கிராம் அகர் அகர்
  3. 800 மில்லி தண்ணீர்
  4. 200 கிராம் சர்க்கரை
  5. 1 ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  6. விரும்பியவாறுபுட் கலர்
  7. பால் கலவை செய்ய:
  8. 2 லிட்டர் பசும்பால்
  9. 1 டின் மில்க்மெயின்ட்
  10. 1/2 கப் ரோஸ் சிரப்
  11. அலங்கரிக்க:
  12. நீளவாக்கில் நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா
  13. ஊறவைத்த சப்ஜா விதை

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஜெல்லி செய்ய முதலில் சைனாகிராஸ் ஐ இரண்டு முறை கழுவி 300 மில்லி சூடான தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் ஊறவைத்த சைனாகிராஸ் சேர்த்து நன்கு கிளறவும்

  2. 2

    பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சைனாகிராஸ் முழுவதும் கரைந்து கண்ணாடி போல் தெளிவாக வந்ததும் இறக்கி அந்த சூட்டிலே வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து தனித்தனியாக பிரித்து விரும்பிய கலர் சேர்த்து ஆறவிட்டு ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை வைத்து செட் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் இரண்டு லிட்டர் பாலை ஒரு லிட்டர் ஆக சுண்ட காய்ச்சவும் அதில் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் வைத்து குளிரவிட்டு கொள்ளவும்

  3. 3

    பின் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் மில்க்மெயின்ட் மற்றும் ரோஸ் சிரப் ல் இருக்கும் இனிப்பே போதுமானது ரோஸ் சிரப் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன்

  4. 4

    சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி ஒரு இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்

  5. 5

    பின் உயரமான டம்ளரில் ரெடியாக உள்ள ஜெல்லியை அடுக்கடுக்காக போடவும் பின் அதன் மேல் ஊறவைத்த சப்ஜா விதையை போடவும் பின் ரோஸ் மில்க் ஐ சிறிது சிறிதாக ஊற்றவும்

  6. 6

    முழுவதும் மொத்தமாக ஊற்றாமல் சிறிது சிறிதாக ஊற்றவும் பின் மேலே அலங்கரிக்க சிறிது ஜெல்லி மற்றும் நட்ஸ் ஐ போட்டு அலங்கரிக்கவும்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக் ரெடி இதை பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes