* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#newyeartamil
பள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
12 பேர்
  1. 2 கப்இட்லி புழுங்கலரிசி
  2. 1 கப்முழு உளுந்து
  3. 1 டீ ஸ்பூன்ஃபுட் கலர்
  4. 1 டீ ஸ்பூன்சமையல் சோடா
  5. ருசிக்குஉப்பு
  6. 1 டீ ஸ்பூன்வினிகர்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    அரிசி, உளுந்து, இரண்டையும், தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பிறகு தண்ணீரை வடித்து விட்டு மைய அரைத்து பௌலில் எடுக்கவும்.

  4. 4

    ஃபுட் கலரை சிறிது தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, மாவில் விடவும்.அதனுடன், உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    கடாயில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, மிதமான தீயில் அடுப்பை வைத்து கொதிக்க விடவும்.

  6. 6

    சர்க்கரை கரைந்ததும், சிறிது வினிகர் விட்டு கொதிக்க விடவும்.பதம் தேவையில்லை.

  7. 7

    கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விடவும்.கடாயில் எண்ணெய் நன்கு காய்ந்ததும்,அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

  8. 8

    சிறிய ஸ்பூனால் மாவை எடுத்து எண்ணெயில், போட்டு நன்கு வேக விடவும்.

  9. 9

    பிறகு பாகில் போடவும்.

  10. 10

    ஜீராவில் நன்கு ஊறினதும், பௌலில் எடுக்கவும்.இப்போது, சுவையான,* பங்க் கடை தேன் மிட்டாய்*தயார்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes