கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.
#Birthday1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 2கப் கோதுமை மாவு
  2. 2வெங்காயம்
  3. 3பச்சை மிளகாய்
  4. கொத்தமல்லி இலை
  5. கறிவேப்பிலை
  6. தேவையான அளவுஉப்பு
  7. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ரொட்டி செய்ய தேவையான வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை எல்லாம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பௌலில் கோதுமை மாவை சேர்த்து,அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்,மல்லி இலை,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கெட்டியாக பிசைந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.

  4. 4

    அதன் பின் எடுத்து ஒரு அலுமினிய ஃபாயில் பேப்பர் மேல் வைத்து கையால் அழுத்தி முடிந்த வரை லேசாக, வைட்டமாக தட்டி வைக்கவும்.

  5. 5

    பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தயாராக தட்டி வைத்துள்ள கோதுமை ரொட்டியை போட்டு மேலே கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,திருப்பி போட்டு வெந்ததும் எடுத்தால் சுவையான சத்தான கோதுமை ரொட்டி தயார்.

  6. 6

    இந்த கரா சாரமான கோதுமை ரொட்டி செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். விரும்பும் போது உடனே செய்து சுவைக்கலாம். பச்சை மிளகாய் சேர்த்துள்ளதால் சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.

  7. 7

    வேண்டுமெனில் கொத்சு,தயிர் சேர்த்து சுவைக்கலாம். நான் இங்கு தக்காளி,நெல்லிக்காய் தொக்கு வைத்துள்ளேன். சுவை மிகுந்தது இந்த கோதுமை ரொட்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes