இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
6பேர்
  1. 100கிராம் துவரம் பருப்பு
  2. 3/4-1கப் பூசணிகாய்
  3. 15சின்ன வெங்காயம்
  4. 1முழு பூண்டு
  5. 2மிளகாய்
  6. 2தக்காளி
  7. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2ஸ்பூன் பெருங்காய தூள்
  9. 3ஸ்பூன் சாம்பார் பொடி
  10. 1டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்,விரும்பினால் சேர்க்க
  11. தேவையானஅளவு உப்பு
  12. தாளிக்க:
  13. 1/2ஸ்பூன் கடுகு
  14. 1/4ஸ்பூன் வெந்தயம்
  15. 3சின்ன வெங்காயம்
  16. 2வரமிளகாய்
  17. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பருப்பை 20நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    சாம்பார் பொடியில் சிறிதளவு தண்ணீர் கலந்து வைத்துக்கொண்டால், சாம்பாரில் கட்டிகள் இல்லாமல் சேர்ப்பதற்குதற்கு சுலபமாக இருக்கும்.

  2. 2

    குக்கரில் ஊற வைத்த பருப்பு,வெங்காயம்,தக்காளி, மிளகாய்,பூசணிக்காய், மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து 2 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும்,மூடி போட்டு 5 விசில் விட்டு எடுக்கவும்.

  3. 3

    ஆவி அடங்கியதும்,குக்கரை திறந்து வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணீர் தனியாக எடுத்துவிட்டு பருப்பை நன்றாக கடைந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    கடைந்த பருப்புடன்,தனியாக வைத்த பருப்புத் தண்ணீர், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

  5. 5

    நன்றாக கொதித்ததும், தண்ணீரில் கலந்து வைத்த சாம்பார் பொடியை சேர்க்கவும்.

  6. 6

    10 நிமிடங்கள் பச்சை வாசம் போக நன்றாக கொதிக்க விடவும். சாம்பார், கெட்டியாக ஆரம்பிக்கும்.

  7. 7

    இதனுடன் தேங்காய் துருவல்(சாம்பாருக்கு கெட்டி தன்மை கொடுக்கும்)சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.உப்பு சரிபார்க்கவும்.

    கடைசியாக,மல்லித் தழை தூவி இறக்கவும்.

  8. 8

    பின்,வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு, உளுத்தம்பருப்பு,வெந்தயம், வரமிளகாய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து, பரிமாறலாம்.

  9. 9

    அவ்வளவு தான்.
    சுவையான, இட்லி சாம்பார் ரெடி.

    இது இட்லிக்கு மட்டுமல்லாமல் தோசை,பொங்கல் என டிபன் ரெசிபிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes