முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 கட்டு முடக்கத்தான் கீரை
  2. 50 கிராம் துவரம் பருப்பு
  3. 5 பல் பூண்டு
  4. 2 தக்காளி
  5. 10 வெங்காயம்
  6. ½ தேக்கரண்டி கடுகு
  7. 2 கொத்து கருவேப்பிலை
  8. 2 காய்ந்த மிளகாய்
  9. 2 பச்சை மிளகாய்
  10. 1 தேக்கரண்டி சீரகம்
  11. சிறிதளவுகொத்தமல்லி
  12. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  13. 2 மேஜை கரண்டி எண்ணெய்
  14. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் பருப்பு தக்காளி, பூண்டு, வெங்காயம்,மஞ்சள் தூள், இவை அனைத்தும் நன்றாக கழுவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

  2. 2

    பின்பு வேகவைத்த பருப்பை நன்றாக கடைந்து முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு வேகவைத்த பருப்பில் முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

  3. 3

    பின்பு கீரை நன்றாக வெந்தவுடன், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,சீரகம்,வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி இவை அனைத்தும் சேர்த்து நன்றாக தாளித்து கீரையில் சேர்க்கவும்.

  4. 4

    பின்பு இவை அனைத்தும் நன்றாக மிக்சியில் அரைத்து இறக்கினால் சுவையான கீரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

கமெண்ட் (9)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
instead of thuvarmparuppu, I used payaththam paruppu. Healthy and tasty

Similar Recipes