எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)

#Meena Ramesh(1 pot 🍯recipie)
இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து கழுவி வைத்துக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தாளிப்பு சாமான்களை மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வெறும் வாணலியில் வரகு சேர்த்து சூடு ஏற வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி இரண்டு முறை கழுவிவிட்டு தண்ணீரில் ஊறவைக்கவும். பருப்பு குக்கரில் சேர்த்து தண்ணீர் மஞ்சள் மற்றும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மூன்று சவுண்ட் விடவும்.
- 3
இதற்கிடையில் தேங்காய் துருவல் பட்டை லவங்கம் ஆம்சூர் தூள், காஷ்மீர் வர மிளகாய் தூள், சாம்பார் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நைசாக தேவை இல்லை.
- 4
வெந்த பருப்பு வெளியில் எடுத்து விட்டு அதே குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், கருவேப்பிலை வெந்தயம், வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அதன் பிறகு தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது ஊற வைத்த வரகை தண்ணீர் வடித்துவிட்டு குக்கரில் சேர்த்து சூடேற வதக்கவும். (பருப்பு வேகும் நேரம் வரகு ஊறினால் போதும். சுமார் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள்.)
- 5
இப்போது கல்லுப்பு சேர்த்துக் கொள்ளவும் நன்கு கலந்து விடவும். பின்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசம் போக பிரட்டி விடவும். வேகவைத்த பருப்பை சேர்க்கவும். பருப்பில் தண்ணீர் இருந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.
- 6
ஒரு கப் வரங்கிற்கு 6 கப் அளவிற்கு தண்ணீர் வைத்தேன் மிகவும் சரியாக இருந்தது. 6 கப் அளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும். இப்போது மீதி அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விடவும். இவையெல்லாம் கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி வெயிட் சேர்க்கவும்.
- 7
மூன்று விசில் விட்டு பிறகு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து ஒரு கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும். மீண்டும் சிறிது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக நெய் சேர்த்துக் கொள்ளவும். தொட்டுக்கொள்ள வடகம் அப்பளம் அல்லது ஏதாவது ஸ்னாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும். சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)


சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)


கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)


கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


சாமை சாம்பார் சாதம்


வரகு உப்புமா(varagu upma recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)


இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)


* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)


சாலை ஓர உணவு கோடைகால வரகு கஞ்சி வற்றல் (Varagu kanji recipe in tamil)


கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)


வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


Instant sambar Saddam


வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)


சௌசௌ சாம்பார்(chow chow sambar recipe in tamil)


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)

கமெண்ட் (2)