கோதுமை புரோட்டா(wheat parotta recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @chithu1989

கோதுமை புரோட்டா(wheat parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 250 கிராம்கோதுமை மாவு
  2. ஒரு டீஸ்பூன்உப்பு
  3. 100mlதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதில் உப்பு சேர்த்துக்கொள்ளவும்

  2. 2

    முதலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பூரி மாவு பதத்திற்கு வரும் வரை தண்ணீர் சேர்த்துக் பிசைந்து வைத்துக் கொள்ளவும். தட்டு போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    பிறகு மாவை உருண்டை செய்து வர மாவில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்

  4. 4

    இப்போது பூரி கட்டையில் வைத்து மாவை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும் பிறகு நீளவாக்கில் மடித்து மீண்டும் மடித்துக் கொள்ளவும்

  5. 5

    இப்போது மீண்டும் மடித்து மாவை பூரி கட்டையில் வைத்து மிதமான பதத்தில் தேய்த்து கொள்ளவும்

  6. 6

    இப்போது அடுப்பில் வைத்துள்ள தோசைகள் சூடானதும் தேய்த்து வைத்துள்ள ரொட்டியை போட்டு அரை நிமிடம் கழித்து மீண்டும் திருப்பி போடவும் பிறகு எண்ணெயை சேர்த்து திருப்பி போட்டு மீண்டும் என்னை சேர்த்து வேகும் வரை சமைத்துக் கொள்ளவும்

  7. 7

    சுவையான கோதுமை பரோட்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @chithu1989
அன்று

Similar Recipes