ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30மணி நேரம்
8பேர்
  1. 1கப் மைதா மாவு
  2. 1கப் பொடித்த சர்க்கரை
  3. 3முட்டை
  4. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/8ஸ்பூன் உப்பு
  7. 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. தேவையானஅளவு ரெட் கலர் ஜெல்
  9. 2டேபிள் ஸ்பூன் ஆயில்
  10. 1/4கப் பால்
  11. 1/2கப் விபிங்க் க்ரீம்
  12. 2டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  13. 1/2ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

1.30மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோகோ பவுடர்,சேர்த்தால் முற்றிலும் மாறுபட்ட கலர் தான் கிடைக்கும் என்பதால்,நான் சேர்க்கவில்லை.
    எனினும் நான் சேர்த்த சிவப்பு கலர் சிறிது ஆரஞ்சு shade கொடுக்கத்தான் செய்தது.

  2. 2

    ஒரு பாத்திரத்தில், மைதா மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து,சலித்து வைக்கவும்.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில்,முட்டை சேர்த்து அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் விட்டு நன்றாக நுரைத்து வரும் வரை பீட் செய்யவும்.

  4. 4

    நுரைத்தும், ரெட் கலர் ஜெல் சேர்த்து கலந்து பின்,பொடித்த சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பீட் செய்யவும். முட்டையின் அளவு இரட்டிப்பாக, foamy-யாக வரும் வரை பீட் செய்யவும்.

  5. 5

    பின்,எண்ணெய் சேர்த்து கலந்து சில நொடிகள் பீட் செய்யவும்.

    பின்,சலித்து வைத்துள்ள மாவு கலவை மற்றும் பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து foamyness குறையாமல் மெதுவாக கலந்து விடவும்.

  6. 6

    பின் கலந்து வைத்துள்ள மாவை, கப் கேக் மோல்ட்-ல் ஊற்றவும்.

  7. 7

    அடுப்பில்,கடாய் வைத்து,ஸ்டண்ட் போட்டு 10நிமிடங்கள்,சிம்மில் சூடுபடுத்தவும்.

    பின் ஊற்றி வைத்தவற்றை ஸ்டாண்டில் வைத்து 25நிமிடங்கள் வரையிலும் வேக விடவும்.

  8. 8

    மீதியிருக்கும் மாவை ஃப்ரிட்ஜ்-ல் வைத்து,மறுபடியும் ஊற்றும் போது எடுத்து,மெதுவாக கலந்து விட்டு மீண்டும் மோல்ட்-ல் ஊற்றி வைத்து இதே போல் வேக வைத்து எடுக்கவும்.

  9. 9

    கேக் ஆறும் சமயத்தில், ஒரு பாத்திரத்தில் விப்பிங் க்ரீம் மற்றும் எசன்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.பின் சர்க்கரை சேர்த்து, stiff பீக் வரும் வரையில் பீட் செய்யவும்.

  10. 10

    Cream ஐ எத்தனை கலர் சேர்க்க வேண்டுமோ, அத்தனை சம பங்காக பிரித்து,தேவையான அளவு கலர் ஜெல் சேர்த்து மீண்டும் பீட் செய்து வைக்கவும்.

  11. 11

    இனி ஆறிய கேக்-ல் விரும்பியவாரு design செய்து கொள்ளவும்.

  12. 12

    அவ்வளவுதான். சுவையான,அழகான ரெட் வெல்வெட் கப் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes