ஷாஹி புலாவ் (உலர் நட்ஸ் கலவை சாதம்)(shahi pulao recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#qk - கலவை சாதம்
காய்கறியுடன் முந்திரி, பாதாம், உலர் திராக்ஷை, பிஸ்தா சேர்த்து செய்யும் சுவைமிக்க அருமையான சத்தானா மசாலா கலவை சாதம்... என் செய்முறை..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடங்கள
4 பரிமாறுவது
  1. 3 கப் உதிரியாக வடித்த சாதம்
  2. 1 பெரிய சைஸ் வெங்காயம்
  3. 1 காரட்
  4. 1/4 கப் பச்சை பட்டாணி
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு
  6. 2 பச்சை மிளகாய்
  7. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  8. 2 டேபிள்ஸ்பூன் முந்திரி
  9. 2 டேபிள்ஸ்பூன் பாதாம்
  10. 2 டேபிள்ஸ்பூன் பிஸ்தா
  11. 2 டேபிள்ஸ்பூன் உலர்ந்த திராஷை
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 1சின்ன துண்டு பட்டை
  14. தலா 2 - ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை
  15. தலா ஒரு டீ ஸ்பூன் - மிளகாய் தூள், கரம் மசால
  16. 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள்,1-டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
  17. 1கைப்பிடி புதினா, கொத்தமல்லி
  18. 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ (4 நூல்)கலந்த பால்,உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடங்கள
  1. 1

    தேவையானவற்றை எடுத்து வைத்துக்கவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிட்டு எடுத்து வைத்துக்கவும். வெங்காயம் காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக்கவும்.

  2. 2

    ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் நட்சை ஒவொன்றாக சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கவும்

  3. 3

    பிறகு அதே கடாயில் பிரிஞ்சி இலை,பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து வறுத்துக்கவும்

  4. 4

    அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் காரட் சேர்த்து க்கவும்

  5. 5

    பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி பச்சைமிளகாய்,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்

  6. 6

    அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி குங்குமப்பூ பால் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்

  7. 7

    அதன் பிறகு சாதம் சேர்த்து நன்கு கிளிறி விட்டு மூடி போட்டு மூடி சிம்மில் 5 நிமிடம் வேக விட்டு வறுத்த நட்சை சேர்த்து நன்றாக கலந்து எலுமிச்சை சாறு சேர்த்து மேலாக பொடியா நறுக்கின மல்லி சேர்த்தும் ஸ்டாவ்வ் ஆப் செய்து எடுத்து விடவும்..

  8. 8

    அருமையான சத்தான் சுவையான ஷாஹி புலாவ் தயார்.. திடீர் விருந்தினர்க்கு குயிக்கா செய்ய கூடிய ரிச்சான சாப்பாடு.... வெங்காய ரைத்தாவுடன் பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes