தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#ric
தேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்...

தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)

#ric
தேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 கப் பிரியாணி அல்லது பாசுமதி ரைஸ்
  2. 2 கட் செய்த வெங்காயம்
  3. 3உருளைக்கிழங்கு
  4. 1 காரட்
  5. 1/2 கப் பச்சை பட்டாணி
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1 -1/2 கப் கெட்டி தேங்காய் பால்
  8. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1கைப்பிடி நறுக்கின கொத்தமல்லி, புதினா
  12. 2 டேபிள்ஸ்பூன் முந்திரி
  13. 4 பிரெட் சின்னதா கட் செய்த
  14. 1டேபிஸ்பூன் உலர்ந்த திராக்ஷை
  15. தேவைக்குபட்டை, கிராம்பு, சோம்பு, பெரும்ஜீரகம்., கடல்பாசி
  16. 2டேபில் ஸ்பூன் - நெய், எண்ணெய், உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பிரியாணி பாசுமதி ரைசை நன்கு கழுகி தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்துக்கவும்.. தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஒரு குக்கர் ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் + 2 ஸ்பூன் எண்ணை சேர்த்து பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், கடல்பாசி சேர்த்து வறுத்து வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  3. 3

    அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி வெட்டி வைத்திருக்கும் எல்லா காய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    மஞ்சள்தூள், மிளகாய் தூள் புதினா மல்லி சேர்த்து வதக்கினபிறகு பாசுமதி ரைஸ் சேர்த்து வதக்கிக்கவும்.

  5. 5

    அத்துடன் 2 கப் தேங்காபால்,1 கப் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி மீடியும் ஹீட்டில் ஒரு சத்தம் வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்துக்கவும்

  6. 6

    கடைசியா ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராக்ஷை, வறுத்து எடுத்தது பிறகு பிரெட் சேர்த்து வறுத்து பிரிஞ்சி ரைசில் சேர்த்து கலந்து விடவும்..

  7. 7

    சுவையான தேங்காபால் பிரிஞ்சி ரைஸ் தயார்.. வெங்காய ரைத்தாவுடன் சேர்த்து சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes