எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்
  1. 1/2கிலோ மட்டன்
  2. 100 கிராம் சின்ன வெங்காயம்
  3. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 3 நாட்டுத் தக்காளி
  5. 2 துண்டு தேங்காய்
  6. 1மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  7. 2மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  8. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 3 தேக்கரண்டி எண்ணெய்
  10. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  11. நறுக்கிய கொத்துமல்லி இலைகள்
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பின் எடுத்து வைத்த கறி மற்றும்பொடிவகைகளில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும், கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    தேங்காய் மற்றும் தக்காளியை அரைக்கவும். அரைத்த விழுதை கறியுடன் சேர்த்து தேவையான. அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  5. 5

    நறுக்கி வைத்த கொத்துமல்லி இலைகளை சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கர் மூடி போட்டு விசில் போடவும். ஒரு விசில் வந்தபின் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.குக்கர் விசில் அடங்கியவுடன் திறந்து பார்க்க சுவையான மட்டன் குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

zaina zuha
zaina zuha @cook_36817778
அன்று

Similar Recipes