முடக்கத்தான் தோசை(mudakkatthan dosai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

முடக்கத்தான் தோசை(mudakkatthan dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1 கப் தோசை மாவு
  2. 2கைப்பிடி அளவு முடக்கத்தான் இலை
  3. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 25 சின்ன வெங்காயம்
  6. 15 பல் பூண்டு
  7. 2 துண்டு இஞ்சி
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. சிறிதுகொத்தமல்லி தழை
  10. 8 வரமிளகாய்
  11. 2 துண்டு தேங்காய்
  12. 15 கிராம் புளி
  13. தேவையானஅளவுகல் உப்பு
  14. சிறிதுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வரமிளகாய் பூண்டு கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும் கூட புளி சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும் பின் முடக்கத்தான் இலையை சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும் பின் ரெடியாக உள்ள மாவில் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி சற்று மெல்லியதாக தேய்க்கவும் பின் மெதுவான தீயில் வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுவென்று சுட்டெடுக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான மணமான முடக்கத்தான் தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes