இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#Kj
கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று...

இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)

#Kj
கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
6பேர்
  1. 1கப் வறுத்த அரிசி மாவு
  2. 2டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு
  3. 1/2கப் வெல்லம்
  4. 1/2ஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1/8ஸ்பூன் உப்பு
  6. 1ஸ்பூன் வெண்ணெய்
  7. 1டேபிள் ஸ்பூன் வறுத்த எள்
  8. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உளுந்தை கலர் மாறாமல் வறுத்து பொடி செய்து சலித்து அளக்கவும்.

  2. 2

    அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு மையாக இருக்க வேண்டும்.குருணை இருந்தால்,சீடை வெடிக்கும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில்,வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து,அதில்1/4கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.பின் வடிகட்டி ஆற வைக்கவும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில்,அரிசி மாவு,உப்பு,உளுந்து மாவு சேர்த்து சலித்து கலந்து வைக்கவும்.

  5. 5

    இதனுடன் வெண்ணெய் மற்றும் வறுத்த எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    இந்த கலவையில் ஆறிய வெல்லக் கரைசல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

  7. 7

    தேவையெனில்,1-3 டேபிள்ஸ்பூன் அளவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது.

    மாவு காயாமல் இருக்க ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

  8. 8

    தேவையான அளவு மாவு எடுத்து மீதமுள்ள மாவை மூடி வைக்கவும்.
    இனி,சிறிதளவு மாவு எடுத்து அழுத்தம் கொடுக்காமல் உருண்டையாக உருட்டி காட்டன் துணி மேல் போட்டுக் கொள்ளவும்.

  9. 9

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,சிம்மில் வைத்து,பிடித்த உருண்டைகளை சேர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.

    அதிக தீயில் வைத்தால்,வெளியே சிவந்து,உள்ளே வேகாமல் இருக்கும்.

  10. 10

    ஆறிய பிறகு சாப்பிட நன்றாக இருக்கும்.பட்டர் சேர்த்திருப்பதால் ரொம்ப கடித்து சப்பிடும்படியாக இல்லாமல், பெரியவர்களும் சாப்பிடும் பக்குவத்தில் இருக்கும்.

  11. 11

    அவ்வளவுதான். சுவையான இனிப்பு சீடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes