உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#ATW1 #TheChefStory
எத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋

உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)

#ATW1 #TheChefStory
எத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
4 பரிமாறுவது
  1. 1கப் கடலை மாவு
  2. 1டேபிள்ஸ்பூன் அரிசிமாவு
  3. 4 பஜ்ஜி மிளகாய்
  4. 1 வெங்காயம்,
  5. 1வேக வைத்த உருளை கிழங்கு
  6. 1கைப்பிடி பொடியாக நறுக்கின கொத்தமல்லி
  7. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  9. 1 பச்சை மிளகாய்
  10. தேவைக்குஉப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும்,பஜ்ஜி மிளகாயின் உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட்டு நடு பாகத்தில் கத்தியால் கீறி விட்டு எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் வேக வைத்த உருளை கிழங்கை கையால் நன்றாக மசித்து விட்டு, பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்

  3. 3

    அத்துடன் கொத்தமல்லி தழை சேர்த்த பிறகு எடுத்து வைத்திருக்கும் மசாலா தூள் சேர்த்து தேவயான உப்பு சேர்த்து கலந்து பிசைந்துக்கவும்

  4. 4

    கீறி வைத்திருக்கும் பஜ்ஜி மிளகாயில் உருளை மசாலாவை கொஞ்சமாக எடுத்து உள்ளே நிறைக்கவும்.

  5. 5

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணையை சூடு பண்ணவும்.ஒரு பாத்திரத்தில் கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து ஸ்டாபபட் பஜ்ஜியை கடலை மாவில் முக்கி என்னையில் போட்டு பொரித்தெடுக்கவும்

  6. 6

    சுவையான ரோட்டு கடை உருளைக்கிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி தயார்....புதினா சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes