* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#TheChefStory #AtW2
குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
8 பேர்
  1. 1/2 கப்கம்பு மாவு
  2. 1/2 கப்கோதுமை மாவு
  3. 1/2 கப்மெல்லிய ரவை
  4. 3 கப்நாட்டுச் சர்க்கரை
  5. 1 ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்
  6. 2 ஸ்பூன்பால் பவுடர்
  7. 1 பெரிய டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  8. 1 ஸ்பூன்ஏலத் தூள்
  9. 1 சிட்டிகைசமையல் சோடா
  10. 1 சிட்டிகைஉப்பு (ருசிக்கு)
  11. 1 டேபிள் ஸ்பூன்பசு நெய்
  12. 3 டம்ளர்தண்ணீர்
  13. எண்ணெய் பொரிப்பதற்கு
  14. 1டேபிள் ஸ்பூன்அலங்கரிக்க:- சீவின பாதாம்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கம்பு மாவையும், கோதுமை மாவையும் சலித்துக் கொள்ளவும்.பாதாமை சீவிக் கொள்ளவும்.கஸ்டர்டு பவுடரை பாலில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு உருகியதும் ரவையை போட்டு, பாதி வறுபட்டதும், கம்பு மாவு, கோதுமை மாவு கருகாமல் வறுக்கவும்.

  3. 3

    வறுபட்டதும், சிறிது சிறிதாக பாலை விட்டு நன்கு வேக வைத்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  4. 4

    பிறகு தட்டில் எடுக்கவும்.

  5. 5

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் தண்ணீர் விட்டு, கொதித்ததும், நாட்டுச் சர்க்கரையை போட்டு, கொதித்து கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும்.

  6. 6

    ஆறி வெந்த ரவையில்,கரைத்த கஸ்டர்டு பவுடர், பால் பவுடர், சமையல் சோடா,சேர்த்து, தேவை என்றால் சிறிது பால் சேர்த்து, மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.

  7. 7

    பிசைந்ததை கையில் நெய் தடவி, விருப்பமான வடிவில் தட்டிக் கொள்ளவும்.

  8. 8

    அடுப்பை சிறு தீயில் வைத்து, வெல்லக் கரைசல், உப்பு, ஏலத்தூள் சேர்த்து, கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தி விடவும். வெல்லம் கரைந்து கொதித்தால் போதும்.பாகு பதம் தேவையில்லை.

  9. 9

    அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மீடியத்தில் வைத்து, தட்டினதை போட்டு, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

  10. 10

    பிறகு அதன் மேல் வெல்லக் கரைசலை ஊற்றி, 15 நிமிடம் ஊற விடவும்.

  11. 11

    பிறகு மேலே சீவின பாதாமை போடவும். இப்போது சுவையான, சுலபமான, ஆரோக்கியமான,*மில்லட், ரவா குலோப் ஜாமூன்* தயார்.நாட்டுச் சர்க்கரை சேர்த்திருப்பதால், கூடுதல் பலன் கிடைக்கும்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes