மஷ்ரூம் பட்டர் மசாலா கறி  (Mushroom Butter masala gravy recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மஷ்ரூம் பட்டர் மசாலா கறி  (Mushroom Butter masala gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 200 கிராம் பட்டன் மஷ்ரூம்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2பெங்களூர் தக்காளி
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  6. 1 டீஸ்பூன் மிளாய்த்தூள்
  7. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1/2 கப் ஃப்ரெஷ் கிரீம்
  12. 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
  13. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பட்டன் மஷ்ரூமை நன்கு கழுவி,நறுக்கி எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,கல் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு,அதில் நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்துவிட்டு தண்ணீரை வடித்து விடவும்.

  3. 3

    வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் சேர்த்து தனித்தனியாக,விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து. உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

  8. 8

    வெங்காயம்,தக்காளி விழுது பச்சை வாசம் போனதும் மசாலாப் பொருள்கள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  9. 9

    பின்னர் தயாராக வைத் துள்ள காளான் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  10. 10

    கடைசியாக கிரீம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.

  11. 11

    எல்லாம் சேர்ந்து வெந்து நெய் மேலே பிரிந்து வரும் போது கசூரி மேத்தி,மல்லி இலை தூவி இறக்கவும்.

  12. 12

    தயாரான மஷ்ரூம் பட்டர் மசாலாவை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

  13. 13

    இப்போது மிக மிக சுவையான, சத்தான மஷ்ரூம் பட்டர் மசாலா கறி சுவைக்கத் தயார்.

  14. 14

    இந்த கறி பிரியாணி, கீரைஸ்,சப்பாத்தி,ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Agalya Hari
Agalya Hari @cook_111896170
Mam siragathul, garam masala, chilli powder 3um epo add pannanum nu sollalaBut taste super

Similar Recipes