பொறி உப்புமா(pori upma recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#SA #CHOOSETOCOOK
அன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை

பொறி உப்புமா(pori upma recipe in tamil)

#SA #CHOOSETOCOOK
அன்று பூஜைக்கு சரஸ்வதிக்கு அர்பணித்த பொறி பொட்டு கடலை இன்று உப்புமா. காய்களுடன் சேர்த்து செய்தேன். அவல் உப்புமாவை செய்வது போல எளிய முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 கப் பொறி
  2. 3 தேக்கரண்டி எண்ணெய்
  3. 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  4. 1/2 தேக்கரண்டி கடுகு
  5. 2கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
  6. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 2 கப் கேரட் - பச்சை பட்டாணி (ஃரோஜன் அல்லது ஃபிரெஷ்
  8. 2பச்சை மிளகாய். பொடியாக நறுக்கியது
  9. 1 அங்குலம் இஞ்சி துண்டு பொடியாக நறுக்கியது
  10. ¼ கப் வேர்க்கடலை
  11. 1 மேஜைகரண்டி மசாலா பொடி
  12. 1/4 கப் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
  13. 20 கறிவேப்பிலை
  14. 1/2 பழம் எலுமிச்சைபழச்சாறு
  15. 1 மேஜைகரண்டி நெய்
  16. உப்பு
  17. அலங்கரிக்க:
  18. 1மேஜை கரண்டி வேர்க்கடலை
  19. 20 கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    ஓரு பாத்திரத்தில் பொரியுடன் 6 கப் கொதிக்கும் நீர் சேர்க்க. 5 நிமிடம் பின், நீர் வடிக்க, பொரியை கையால் பிழிந்து நீர் நீக்க,
    மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் சோம்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்க. பெருங்காயம் சேர்க்க.வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    வெங்காயம் பாதி வதங்கியதும், கேரட், பட்டாணியை சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மசாலா பொடி, சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பொரியை சேர்த்து மெதுவாக கலக்கவும். மூடி 4 நிமிடம் அடுப்பின் மேல். நெய் சேர்த்து கிளற. பிறகு கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சபழச்சாறு சேர்த்து கலந்து விடவும். சுலபமான சுவையான பொரி உப்மா தயார்

  4. 4

    பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. மைக்ரோவெவ் சேஃப் தட்டில் 1 தேக்கரண்டி எண்ணையில் வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் மைக்ரோவெவ் செய்க. வறுத்த பொருட்களை உப்புமா மேல் தூவி அலங்கரிக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes