*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#SA #choosetocook
கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம்.

*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)

#SA #choosetocook
கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
6 பேர்
  1. 4 கப்உதிரியாக வடித்த சாதம்
  2. 4சாறுள்ள எலுமிச்சம்பழம்
  3. ருசிக்குஉப்பு
  4. 1/4 கப்பாதியாக உடைத்த முந்திரி
  5. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  6. 1 டீ ஸ்பூன்தாளிக்க:- கடுகு
  7. 3/4 ஸ்பூன்க.பருப்பு
  8. 3/4 ஸ்பூன்உ.பருப்பு
  9. 1டேபிள் ஸ்பூன்நறுக்கின ப.மிளகாய்
  10. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  11. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  12. 1 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  13. அலங்கரிக்க:- வறுத்த முந்திரி துண்டுகள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.முந்திரியை பாதியாக உடைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். உப்பு போட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து, முந்திரியை போட்டு நன்கு வறுக்கவும்.

  3. 3

    அடுத்து, ம.தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    வடித்த சாதத்தை தட்டில் போட்டு, மேலே 1 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு ஆற விடவும்.

  5. 5

    ஆறினதும் வறுத்த தை சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறை ஊற்றவும்.

  6. 6

    ஊற்றினதும், ஒன்று சேர நன்கு கிளறவும்

  7. 7

    கிளறினதும் பௌலுக்கு மாற்றி மேலே வறுத்த முந்திரியை வைக்கவும்.

  8. 8

    இப்போது மிகவும் சுவையான, சுலபமான, *சித்ரான்னம்* தயார். இது கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலம். செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes