வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 100கிராம் பட்டாணிப்பருப்பு
  2. 50 கிராம் கடலைப்பருப்பு
  3. 1கப் பொடியாக கட் செய்த வாழைப்பூ
  4. 1/2கப் பொடியாக கட் செய்த வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
  6. பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை
  7. 1டீஸ்பூன் சோம்பு,
  8. 4 வரமிளகாய்
  9. 2பல் பூண்டு
  10. 1சிறு துண்டு இஞ்சி
  11. 1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. தேவையான அளவுபொரிக்கத் எண்ணெய்
  13. 1சிறு துண்டு பட்டை
  14. 2 இலவங்கம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பு, பட்டாணிப்பருப்பு இரண்டையும் கழுவி 1மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் சோம்பு, வரமிளகாய், இஞ்சி, பூண்டு,பட்டை, இலவங்கம் சேர்த்து கரகரப்பாக அரைத்து இதனுடன் பருப்பை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.

  3. 3

    இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவில் உருண்டையாக உருட்டி வைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளை போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes