பாதாம் பனீர் கிரேவி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

பாதாம் பனீர் கிரேவி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணிநேரம்
4 பேர்கள்
  1. மல்லிவிதை(தனியா)-2 ஸ்பூன்
  2. சீரகம் -1ஸ்பூன்
  3. சோம்பு -அரைஸ்பூன்
  4. மிளகு- அரைஸ்பூன்
  5. வரமிளகாய்- 3
  6. பெரியவெங்காயம்- 3
  7. தக்காளி - 2
  8. பச்சை மிளகாய்-3
  9. பூண்டு பல்- 6
  10. இஞ்சி- 1 துண்டு
  11. சின்னபட்டை - 3
  12. ஏலக்காய் - 3-4
  13. பனீர்-1 பாக்கெட்
  14. மஞ்சள்தூள் -கால்ஸ்பூன்
  15. மல்லிதழை- சிறிதளவு
  16. சமையல்எண்ணெய்- தேவைக்கு
  17. வெண்ணெய்- விருப்பப்பட்டால்

சமையல் குறிப்புகள்

முக்கால்மணிநேரம்
  1. 1

    முதலில் மல்லி விதை, சீரகம்,சோம்பு,மிளகு,வரமிளகாய் வறுக்க எடுத்துவைத்துக்கொள்ளவும்.2 தக்காளி, பூண்டு, 2 பெரியவெங்காயம்,இஞ்சி, பச்சை மிளகாய்வதக்கி அரைக்க கட்பண்ணி எடுத்துக்கொள்ளவும். 1பெரியவெங்காயம்,2 பச்சை மிளகாய் கட்பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    பட்டை,ஏலக்காய், மல்லிதழை எடுத்துக்கொள்ளவும். மல்லி விதை,சோம்பு,சீரகம், மிளகு,வரமிளகாய் வறுத்து ஆறவைக்கவும்.

  3. 3

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு தக்காளி,பூண்டு,இஞ்சி, பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், 15பாதாம்பருப்பு எல்லாம் வதக்கி ஆறவைக்கவும்.

  4. 4

    வதக்கியது நன்கு ஆறவிடவும்.பனீர் எடுத்துவைக்கவும்.

  5. 5

    வறுத்ததை அரைத்துக்கொள்ளவும். வதக்கிய தக்காளி,வெங்காயம், இஞ்சி,பூண்டு,பாதாம் அரைத்துக்கொள்ளவும் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய் போடவும்.

  6. 6

    கட் பண்ணிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.

  7. 7

    பனீர் கட்பண்ணிக்கொள்ளவும் -வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் வெங்காயம், தக்காளி அரைத்ததைச் சேர்க்கவும்.பின் அரைத்தமசாலா சேர்க்கவும்.

  8. 8

    நன்கு கொதிக்கட்டும். பின் கட் பண்ணிய பனீர் சேர்க்கவும்.

  9. 9

    பட்டர் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.பாதாம் சேர்ந்ததால் தேவைபடாது.

  10. 10

    நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் கேஸை ஆப் பண்ணவும்.இறக்கி மல்லிதழை தூவவும்.

  11. 11

    பாதாம் பனீர் கிரேவி ரெடி.சப்பாத்தி,பரோட்டா, தோசைக்கு செம டேஸ்டாக இருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes